search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அளவில்"

    • மாநில அளவிலான கூடைப்பந்தாட்டபோட்டி நடந்தது.
    • சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள அரசு சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கூடைபந்தாட்ட போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

    முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கொரியர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழக முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசினை சோழவந்தான் அணியும், 2-ம் பரிசினை வத்தலகுண்டு அணியும், 3-வது பரிசினை ஜேப்பியார் சென்னை அணியும், 4-வது பரிசினை ஆர்.சி.பி.சி. மதுரை அணியும் பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் பரிசு கோப்பையையும் சன்மானமும் வழங்கினர்.

    சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான போட்டியில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.

    அருப்புக்கோட்டை

    பள்ளிக்கல்வித்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் நடைபெற்றன. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியின் ஐன்ஸ்டீன் குழுவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் லலித்குமார், கோபிநாத், அபிஷேக் அடங்கிய குழு சமர்பித்த யோசனை ட்ரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியர் சரவணகுமார் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் ஏ.பி.கே. கல்விக்குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி தலைவர் சிவராமகிருஷ்ணன், பள்ளிச் செயலாளர் மணி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

    கடந்த மே 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்று 3-ம் இடத்தை பெற்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசினையும், முதல்வர் விருதினையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரிடம் விருது பெற உள்ளனர்.

    முன்னதாக இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.

    • கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.
    • இந்நிலையில் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் 7.5 ஒதுக்கீட்டில் மாநில அளவில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.

    இவர்கள் பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளனர். இந்நிலையில் ராகுல் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 400 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 5-வது இடமும், பின் தங்கிய வகுப்பு பிரிவில் 2-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    கோகுலும் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 372 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ராகுல் சென்னை மெடிக்கல் கல்லுாரியிலும், கோகுல் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியிலும் சேர்ந்த்துள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் தங்கள் படித்த பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜூ உள்பட ஆசிரியர்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • ராமநாபுரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கம் கழகம் சார்பில் 34-வது 9 வயதிற்குட்பட்டோர் பொது மற்றும் சிறுமியர்களுக்கான மாநில அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார்.

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளர் எப்ரோம், துணைத் தலைவர் தேவி உலக ராஜ், டைமண்ட் சீ புட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் அன்பழகன், ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர்கள் சண்முக சுந்தரம், ராஜாராம்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 200-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் பாபு, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார் ஆகியோர் செய்தனர்.

    ×